சுந்தரபாண்டியன்
ஆடுன காலும் பாடின வாயும் சும்மா இருக்காது - ஒரு பிரபலமான பழமொழி. அந்த வகையறாவில் இந்த ஆர்வக்கோளாறான பிளாக்கர் எழுதுவதையும் சேர்க்கலாம். சில நாட்களுக்கு முன் வெளியான சுந்தரபாண்டியனை பற்றி கொஞ்சம் எழுதலாம் அப்படீன்னு ஒரு ஆசை. படத்தில் எனக்கு தெரிந்த, நான் ரசித்தவைகளையே எழுதுகிறேன்.
டின்னர் முடிச்சுட்டு உறக்கம் வருவதற்காக லேசா படத்தை ஓடவிட்டால் நமக்கே தெரியாமல் படத்தில் ஆழ்ந்து விட்டேன். சசிக்குமார் படங்களில் நட்பின் நடப்புகளை, காதலின் வேகத்தை பிரமாதமாக காண்பிப்பார். அந்த வகையில் அடுத்து ஒரு நட்பின் பரிணாமத்தை மிக இயல்பான ஒரு கதையை தன் சீடரை இயக்குனராக்கி அவர் மூலம் வெளிக்கொண்டு வந்திருக்கிறார்.
5 நண்பர்கள். காதல். துரோகம். இதுதான் படத்தோட பிளாட். லேசா சுப்பிரமணியபுரம் வாசம் வந்து போறதை தவிர்க்க முடியல.
சற்றே ஒரு முதிர்ச்சி மட்டும் இல்லாதிருந்தால் ஒரு அற்புதமான நாயகனாக அவரால் இருக்க முடியும். ஆனாலும், படம் முழுவதும் இளமைத்துள்ளல் நிரம்பி வழிகிறது. நண்பனின் காதலுக்கு உதவப்போய் தானே காதலில் விழுவது அனைவரும் எதிர்பார்க்கும் ஒன்று, மேலும் அதரப்பழசான கதையும் கூட. ஆனால் தான் ஏற்கனவே காதலித்த, தன் காதலை மறுத்துவிட்ட பெண்ணை நண்பன் ஒருதலையாக காதலிக்க, அவனுக்கு உதவப்போவது புதிது. அந்த பெண், நாயகி, லக்ஷ்மி மேனன், தன்னைக் காதலிக்கிறாள் என்று நண்பனிடம் இயல்பாக சொல்லுமிடம் வெகு அழகு. படம் முழுவதும் வரும் இயல்பான நகைச்சுவையான வசனங்கள் படத்தைத் தொய்வின்றி கொண்டு செல்கின்றது. உதாரணம் - "தருதலையா போறதுக்கு எப்புடியெல்லாம் யோசிக்கிரானுங்க?". "சச்சினா இருந்தாலும் அடிச்சாத்தான் ரன்னு". "ஏலத்துல இருந்து மாச கான்ட்ராக்டுக்கு போயிட்டானுங்கடி".
மாமன் மகளிடம் செய்யும் ரகளை, ரசிக்க வைக்கும் சரியான குறும்பு. இன்றும் நமது கிராமங்களில் இந்த விஷயங்கள் உள்ளது. அதேபோல, அந்த பாட்டி. சீயான் சீயான் என்று அமர்களப்படுத்தியிருக்கிறார்,
புது வரவு, லக்ஷ்மி மேனன் நிறைவாய் அழகாக நடித்திருக்கிறார். அதிகப்படியான ஒப்பனைகள் இல்லாமல் தெற்குப் பெண்ணாகவே காட்சி தருகிறார். நடிப்பிலும் அப்படியே. அப்பாவிடமிருந்து கல்யாணத்திற்கு சம்மதம் வந்தவுடன் ஓடிவந்து அப்பாவை கட்டிக்கொள்ளும் நடிப்பு நன்று. யாருப்பா அது அந்த தோழி? நம்ம பக்கத்து வீடு பெண் போல, நல்ல தேர்வு.
சூரி அள்ளுகிறார். மற்றபடி அப்புக்குட்டி, விஜய் சேதுபதி & இனிகோ பிரபாகரன் ஆகியோர் தமது பங்கை நிறைவேற்றியிருக்கிறார்கள். நரேன் கம்பீரமான பாசமான அப்பாவாக நன்றாக நடித்துள்ளார்.
இசை பரவாயில்லை. பாடல்கள் ரசிக்கும்படியாக உள்ளது. தேனி, உசிலம்பட்டி வட்டாரத்து பழக்கங்களை அப்படியே காட்டியிருக்கிரார்கள்.
அப்புகுட்டியை தள்ளிவிட்டது சசிக்குமார் இல்லை என்று தெரியவருவது நல்ல ட்விஸ்ட். "குத்துனது நண்பனா இருந்தா செத்தாக்கூட சொல்லக்கூடாது. அதாண்டா நட்பு" என்று சரியான பஞ்ச் டயலாக் சொல்லி படத்தை முடிக்கிறார் சசிக்குமார்.
ஆனால் படம் முழுவதும் வரும் ஆல்கஹால் பாட்டில்களை தவிர்த்திருக்கலாம். மொத்தத்தில் சரியான ஜனரஞ்சகமான படம். ஆபாசமில்லாமல் படம் தந்துள்ளார் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்.