படப்பதிவுகள்
புகைப்படம் எடுத்தல் எனக்குப் பிடித்தமான ஒன்று. சிறு வயதில் இருந்தே ஒரு சில விஷயங்களில் ஈர்ப்பு இருந்தது. அவற்றில் மிக முக்கியமானவைகளாக புகைப்படக் கருவியும், கீ போர்டும் (கல்லூரி பருவத்தில்) இருந்தது. ஒரு நல்ல புகைப்படக் கருவி வாங்கவேண்டும் என்ற ஆசை உள்ளத்தில் ஏறக்குறைய 25 வருடங்களாக புதைந்து கிடந்தது.
வாழ்க்கை எல்லோருக்கும் எல்லாமும் தந்து விடாது. இது என்னுடைய பார்வை. முயற்சிக்கும் மனப்பான்மை மட்டும் ஒருவருக்கு வெற்றியை தந்து விடுவதில்லை. பொருளாதார சூழ்நிலை, ஊக்குவித்தல் மற்றும் சமுதாய நிலை ஆகியவைகளே தூண்களாக நிற்கின்றன.
சென்ற வருடம் வரை எனது ஆசை வெறும் கனவாகவே இருந்தது, ஒரு சாதாரண ஒளிப்படக்கருவி கூட வாங்காமல். இப்பொழுது ஒரு ஒளிப்படக்கருவி என் கைகளில். ஆக நான் வாங்கும்பொழுது புகைப்படக் கருவியாக இருந்தது அறிவியல் முன்னேற்றத்தினால் ஒளிப்படக்கருவியாக மாறியது.(பிலிம் காலத்தில் ஆரம்பித்து டிஜிட்டல் காலத்தில் முடிந்தது).
சதி லீலாவதி படத்தில், கமல்ஹாசன் தன் மகனை, மனைவியாக நடித்த கோவை சரளாவிடம் சொல்லும் வசனம் ஞாபகத்திற்கு வருகிறது. " நம்ம புள்ள போன ஜன்மத்தில பாம்பாக பொறந்திருப்பானோ? இப்படி படம் பிடிக்கிறான்?" என்று கிண்டலாக கூறுவார். இதற்கும் என் பதிவிற்கும் உள்ள ஒரே விஷயம் ஒளிப்படக்கருவி மட்டும்தான். இது ஒரு இடைச்செருகல் மட்டுமே.
சரி, கேமரா விஷயத்திற்கு வருவோம்... 2010 ல் ஒரு சிறிய கேமரா, ஒரு 5000 ரூபாயில் வாங்கலாம் என்று ஆரம்பித்து, 2011 செப்டம்பர் வரை தேடும் படலமும் யோசனையும் வளர்ந்துகொண்டே போனது. யோசனை வளர வளர பொருளாதார முதலீடும் வளர்ந்து கொண்டே போனது தெரிந்தாலும் அதன் கடைசி எல்லை வரை போனது. ஒரு கட்டத்தில் இதுதான் வேண்டும் என்று தீர்மானித்தபோது, மயக்கமே வந்துவிட்டது. ஒரு சிறந்த சலுகை நாளில் வாங்கியும் வந்துவிட்டேன். அன்று இரவு தூங்கவில்லை. ஒரு சிறு குழந்தையின் சந்தோசமும் பிரமிப்புமாக அந்த இரவு போனது.
இடுகை நீண்டுகொண்டே போவதால் முதற் பகுதி என்று நினைத்து முடிக்கின்றேன்.
பின்குறிப்பு:: வெறுமே எவ்வித நிர்ணயமும் (செட்டிங்ஸ் ) இல்லாமல் எடுத்த சில படங்களை தருகிறேன்..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக